இந்­திய 'டிஜிட்டல்' சந்தை ரூ.20,000 கோடியை தாண்டும்

தினமலர்  தினமலர்
இந்­திய டிஜிட்டல் சந்தை ரூ.20,000 கோடியை தாண்டும்

மும்பை:'இந்­தி­யாவின் 'டிஜிட்டல்' சந்தை, 2020ல், 20ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை தாண்டி வளர்ச்சி காணும்' என, யர்னஸ்ட் அண்டு யங் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.அதன் விபரம்: கடந்த ஆண்டு நில­வ­ரப்­படி, இந்­தி­யாவில், டிஜிட்டல் சந்­தையின் மதிப்பு, 8,490 கோடி ரூபாய் என்ற அளவில் உள்­ளது. இதில், ஸ்மார்ட்­போன்கள் வாயி­லான விளம்­ப­ரங்கள், வீடியோ, இசை, விளை­யாட்டு ஆகிய நான்கு பிரி­வு­களின் வருவாய், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு உள்­ளது.
கடந்த, 2015 நில­வ­ரப்­படி, இந்­தி­யாவில் ஸ்மார்ட்போன் பயன்­பாடு, 31 சத­வீ­த­மாக இருந்­தது. இது, 2020 இல், 59 சத­வீ­த­மாக உயரும். இதே காலத்தில், டிஜிட்டல் விளம்­ப­ரங்­க­ளுக்­காக செல­வி­டு­வது, 18,500 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்கும். தற்­போது, ஒட்­டு­மொத்த விளம்­பர செல­வி­னங்­களில், டிஜிட்டல் ஊட­கங்­களின் பங்கு, 14 சத­வீ­த­மாக உள்­ளது. இது, 2019ல், 25 சத­வீ­த­மாக உயரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
நாட்டில், 'ஆன்–லைன்' திரைப்­ப­டங்கள், பொழு­து­போக்கு நிகழ்ச்­சிகள் ஆகி­ய­வற்றை பார்ப்­போரின் எண்­ணிக்கை வேக­மாக உயர்ந்து, 45 கோடி­யாக அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, இப்­பி­ரிவில், உல­க­ளவில், சீனா­விற்கு அடுத்த இடத்தை இந்­தியா பிடிக்கும். கிரா­மப்­பு­றங்­க­ளிலும், டிஜிட்டல் பயன்­பாடு பெருகி வரு­கி­றது. இதனால், இந்­தி­யாவில் டிஜிட்டல் சந்தை வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது.

மூலக்கதை