மலிங்காவுக்கு டெங்கு தெ.ஆ .தொடரில் விலகல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மலிங்காவுக்கு டெங்கு தெ.ஆ .தொடரில் விலகல்

 கொழும்பு:  இலங்கையைச் சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. 33 வயதான மலிங்கா கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக  காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

முழங்கால் காயத்தால் கடந்த ஆண்டு உலக கோப்பை டி. 20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் விளையாடிய மலிங்கா, பிப்ரவரியில் வங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை டி. 20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒருபோட்டியில் மட்டும் பங்கேற்றார்.

 

இந்நிலையில் கடந்த மாதத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். டெங்கு பாதிப்பில் இருந்து மீண்டபோதிலும், உடற்தகுதி பெறாததால் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி. 20 தொடரில் மலிங்கா  இடம்பெற மாட்டார் என அணி மேலாளர் ரஞ்சித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தென்ஆப்ரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி கடைசி டெஸ்ட்டில் நாளை விளையாடுகிறது. இதன்பின்னர் 5  ஒன்டே மற்றும் 3 டி. 20 போட்டிகளில்  மோதுகிறது.

பிப்ரவரியில் ஆஸி. யுடன் டி. 20 தொடரிலும் மலிங்கா  பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது.


.

மூலக்கதை