ஜெயலலிதாவின் மிக முக்கிய அறிவிப்பு 6 மணிக்கு தெரியும்… சுப்ரமணியசுவாமி டுவிட்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ஜெயலலிதாவின் மிக முக்கிய அறிவிப்பு 6 மணிக்கு தெரியும்… சுப்ரமணியசுவாமி டுவிட்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி 6 மணிக்கு வெளியிடுவார் என்று ராஜ்யசபா எம்.பியும், பாஜக மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. மிக மிக மோசமாக உள்ளதாக லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே அறிவித்துள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள தொண்டர்கள் கொந்தளிப்பாகவும், உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றனர். எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு சிகிச்சை அளித்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் உடல்நிலை குறித்து நள்ளிரவில் இருந்தே பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் பாஜக ராஜ்யசபா எம்.பியும், மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி மிக முக்கிய அறிவிப்பு 6 மணிக்கு வெளியாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை