ஐசிசி தடை விதித்த ஆசிப்பை சேர்க்க பிசிபி மறுப்பு?

தினகரன்  தினகரன்
ஐசிசி தடை விதித்த ஆசிப்பை சேர்க்க பிசிபி மறுப்பு?

கராச்சி: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமதுஆசிப். இவர் 2011ல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, சர்வதேச போட்டிகளில் விளையாட அவருக்கு ஐசிசி தடை விதித்தது. அதன்பின் புகார் நிரூபிக்கப்பட்டதால் ஓராண்டு சிறைவாசமும் அனுபவித்தார். 2015ம் ஆண்டு, தடைகாலம் முடிந்த நிலையில், ஆசிப்பை அணியில் மீண்டும் சேர்த்துக் கொள்வது பற்றி பிசிபி முடிவு செய்து கொள்ளலாம் என ஐசிசி கூறியது. ஆனால் பாகிஸ்தான் தேர்வுக்குழு ஆசிப்பை அணியில் சேர்க்கவில்லை. தன்னை அணியில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்குமாறு ஐசிசியிடம் ஆசிப் முறையிட்டார். தேசிய அணி தேர்வில் நாங்கள் தலையிட முடியாது, என ஐசிசி பின்வாங்கியது. தற்போது பாக்., உள்ளூர் போட்டிகளில் ஆசிப் விளையாடி வருகிறார். சமீபகாலமாக பாக்., வேகப்பந்து வீச்சு சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. பாக். கிரிக்கெட் வாரியம் தன்னை அணியில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பதற்கவே சில தடைகளை விதிப்பதாக கருதுகிறேன் என ஆசிப் கூறியுள்ளார்.

மூலக்கதை