ரெமோ வில்லனிடம் அனுபம் கெர் கேட்ட கேள்வி..!

தினமலர்  தினமலர்
ரெமோ வில்லனிடம் அனுபம் கெர் கேட்ட கேள்வி..!

சமீபத்தில் வெளியான ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனின் காதலுக்கு வில்லனாக வந்து, கடைசியில் “பாவம்ப்பா.. கதைக்காக வேண்டுமென்றே இவரை வில்லனாக மாத்திட்டாங்களே” என பரிதாபத்தை அள்ளிக்கொண்டவர் தான் மலையாள நடிகர் அன்சன் பால்.. கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான 'ஊழம்' படத்தில் பிருத்விராஜூக்கு வில்லனாகவும் நடித்திருந்தார்.. மலையாள புத்தகம் ஒன்றில் இவரது புகைப்படத்தை ஒன்றை பார்த்துதான் 'ரெமோ' படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு தேடிவந்ததாம்..

ஆனால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பிரபல பாலிவுட் நடிகரும் நாடக ஆசிரியருமான அனுபம் கெர் நடத்தி வரும் நடிப்பு பயிற்சி பள்ளியில் நடிப்பு கற்றுக்கொண்டவர் தான் இந்த அன்சன்... தான் இந்தியில் இயக்கிய சில மேடை நாடகங்களில் அன்சனை நடிக்க அழைத்த அனுபம் கெர், அன்சனிடம் அவற்றில் உனக்கு வேண்டும் என்கிற கேரக்டர் ஏதோ ஒன்றை எடுத்துக்கொள் என சில சாய்ஸ்களை கொடுத்தாராம்.. அதில் அன்சன் தேர்ந்தெடுத்தது பெரும்பாலும் தமிழ், மலையாளம் என பேசும் தென்னிந்தியன் கேரக்டர் ஒன்றைத்தான்.

இதைப்பார்த்ததும் அனுபம் கெர் நீ ஏன் இந்தியில் வசனம் பேசி நடிக்க கூடாது என கேட்டாராம். அதற்கு அன்சன், தனக்கு அவ்வளவாக தெரியாத மொழிகளில் தேவையில்லாமல் தலையிட்டு சொதப்பிவிடக்கூடாது என்றும், தெரிந்த மொழிகளில் நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என காரணம் கூறினாரம். அன்சன் நேர்மையான முறையில் சொன்ன விளக்கத்தை கேட்டு, “என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணிவி\ட்டாய்.. நீ போகவேண்டிய பாதை எது என்பதில் தெளிவான முடிவில் இருக்கிறாய்.. குட் லக்” என வாழ்த்தினாராம் அனுபம் கெர்.

மூலக்கதை