சுவிட்சர்லாந்தில் 'பைரவா' படப்பிடிப்பு

தினமலர்  தினமலர்
சுவிட்சர்லாந்தில் பைரவா படப்பிடிப்பு

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு தற்போது சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. அங்கு இப்படத்திற்கான சில பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவடைந்தது. சில பாடல்களை இங்கு படமாக்கிய பிறகு சுவிட்சர்லாந்துக்கு படக்குழுவினர் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

'அழகிய தமிழ் மகன்' படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பரதன் இயக்கும் படம் இது. இப்படம் பற்றி தற்போதுதான் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. படத்தின் வியாபாரமும் ஆரம்பமாகிவிட்டதாகத் தெரிகிறது. இதுவரை வெளியான விஜய் படங்களை விட இந்தப் படத்திற்கான வியாபாரம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக இசையமைக்கிறார். விஜய்க்கேற்றபடி மாஸான அறிமுகப் பாடலை படத்திற்காக அதிரடியாகக் கொடுத்திருக்கிறாராம் சந்தோஷ். 'பட்டைய கிளப்பு பட்டைய கிளப்பு, பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பு..' என்ற அறிமுகப் பாடல் தெறிக்கவிடும் என்கிறார்கள்.

2017ம் ஆண்டு பொங்கலுக்கு 'பைரவா' வெளியாக உள்ளது.

மூலக்கதை