அதி­ரடி விலை குறைப்பு, சலு­கைகள்:வலை­தள நிறு­வ­னங்கள் ‘அடா­வடி’ வர்த்­தகம்:சில்­லரை விற்­ப­னை­யா­ளர்கள் புகார்

தினமலர்  தினமலர்
அதி­ரடி விலை குறைப்பு, சலு­கைகள்:வலை­தள நிறு­வ­னங்கள் ‘அடா­வடி’ வர்த்­தகம்:சில்­லரை விற்­ப­னை­யா­ளர்கள் புகார்

புது­டில்லி;வலை­தள சந்தை நிறு­வ­னங்கள்,அதி­ரடி விலை குறைப்பில் பொருட்களை விற்­பதால், கடை­களில் விற்­பனை பாதிக்­கப்­ப­டு­வ­தாக,சில்­லரை வணி­கர்கள், மத்­தியஅர­சிடம் புகார் தெரி­வித்து உள்­ளனர்.
பண்­டிகை காலத்தை முன் னிட்டு, ‘அமேசான், ஸ்நாப்டீல், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், குறைந்த விலையில், ‘டிவி, ரெப்­ரி­ஜி­ரேட்டர், வாஷிங் மிஷின், மொபைல் போன்’ உட்பட ஏரா­ள­மான பொருட்களை விற்­பனை செய்­கின்­றன. இதற்­காக, ஊட­கங்­களில் மிகப்­பெ­ரிய அளவில் விளம்­பரம் செய்­யப்­ப­டு­கி­றது. தள்­ளு­படி சலு­கைகள் கார­ண­மாக, வலை­த­ளங்­களில் பொருட்கள் வாங்கும் போக்கு அதி­க­ரித்து வரு­கி­றது. அலைச்சல் இன்றி, வீடு தேடி பொருள் வந்து விடு­வதால், இளைய சமூ­கத்­தினர் மத்­தியில், வலை­தள நிறு­வ­னங்­களின் பொருட்­க­ளுக்கு மவுசு பெருகி உள்­ளது.
இதனால், கடை­களில் பொருட்­களை விற்­பனை செய்யும் சில்லரை வர்த்­த­கர்கள், வலை­தள சந்தை நிறு­வ­னங்­களின் போட்டியை சமாளிக்க முடி­யாமல் திண­று­கின்­றனர்.‘வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், பொருட்­களை விற்­பனை செய்­வோ­ருக்கும், வாங்கும் நுகர்­வோ­ருக்கும் இடையே, பால­மாக மட்­டுமே செயல்­பட வேண்டும்; நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ, பொருட்கள், சேவைகள் ஆகி­ய­வற்­றுக்­கான விலையில் தலை­யிடக் கூடாது’ என, தொழில் கொள்கை மற்றும் மேம்­பாட்டு துறையின் சட்ட விதி­முறை கூறுகிறது.
இதை, வலை­தள சந்தை நிறு­வ­னங்கள் மீறி நடந்து கொள்­வ­தாக, இந்­திய சில்­லரை வர்த்­த­கர்கள் கூட்ட­மைப்பு குற்­றஞ்­சாட்டி உள்ளது.இது தொடர்­பாக, இக்­கூட்­ட­மைப்பைச் சேர்ந்த, பியூச்சர் குழு­மத்தின் தலைமை செயல் அதி­காரி, கிஷோர் பியானி தலை­மை­யி­லான வணி­கர்கள் குழு, மத்­திய நிதி­அ­மைச்சர் அருண் ஜெட்­லியை, டில்­லியில் சந்­தித்து பேசி­யது. அப்­போது, வலை­தள சந்தை நிறு­வ­னங்­களின் முறை­யற்ற செயல்­பா­டுகள் குறித்து புகார் தெரி­விக்­கப்­பட்­டது.
இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­களிடம், கிஷோர் பியானி கூறியதாவது:வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், அதி­ர­டி­யாக தள்­ளு­படி விலையில் பொருட்கள் விற்­பதால், சில்­லரை வணி­கர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்பு குறித்து, நிதி­ய­மைச்­ச­ரிடம் விரி­வாக எடுத்­து­ரைத்தோம்.
பொருட்­களின் விலை, கடை­யிலும், வலை­த­ளத்­திலும் ஒரே மாதி­ரி­யாக இருக்க வேண்டும். அது தொடர்­பாக உறு­தி­யான, தெளி­வான கொள்­கையை மத்­திய அரசு உரு­வாக்க வேண்டும் என, தெரி­வித்­துள்ளோம்.சில்­லரை விற்­ப­னையில், அன்னிய நேரடி முத­லீ­டு­களால் ஏற்­பட்­டுள்ள தாக்கம் குறித்தும் விவ­ரித்தோம். எங்கள் கோரிக்­கை­களை பரி­சீ­லிப்­ப­தாக, அமைச்சர் தெரி­வித்து உள்ளார். இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை