குஜ­ராத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு ஏற்­று­மதி ஹோண்டா நிறு­வனம் துவக்­கி­யது

தினமலர்  தினமலர்
குஜ­ராத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு ஏற்­று­மதி ஹோண்டா நிறு­வனம் துவக்­கி­யது

ஆம­தாபாத்;ஹோண்டா நிறு­வனம், குஜராத் ஆலையில் உற்­பத்தி செய்­யப்­பட்ட இரு­சக்­கர வாக­னங்­களை, இலங்­கைக்கு ஏற்­று­மதி செய்ய துவங்கி உள்­ளது. ஹோண்டா மோட்டார் சைக்­கி­ளுக்கு, குஜராத் மாநிலத்தில், தொழிற்­சாலை உள்­ளது. அங்கு, கடந்த பிப்., மாதம், ‘ஆக்­டிவா, டியோ’ மாடல் வாக­னங்­களின் உற்­பத்தி துவங்­கி­யது. ஆண்­டுக்கு, 12 லட்சம் வாக­னங்கள் தயா­ரிக்கும் திறன் உடை­யது அந்த ஆலை.இந்­நி­லையில்,ஹோண்டா நிறு­வனம், குஜராத் ஆலையில் உற்­பத்தி செய்­யப்­படும் வாக­னங்­களை ஏற்­று­மதி செய்ய துவங்கி உள்­ளது.
இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:கடந்த வாரம், குஜராத் ஆலையில் இருந்து, முந்த்ரா துறை­முகம் வழி­யாக, ஏற்­று­மதி துவங்­கி­யது. முதற்­கட்­ட­மாக, இலங்­கைக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்­டது. எங்கள் நிறு­வ­னத்­திற்கு, இலங்கை மற்றும் நேபாளம் முக்­கிய ஏற்­று­மதி நாடு­க­ளாக உள்­ளன. இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை