தங்க சேமிப்பு பத்­திரம் அக்., 24ல் வெளி­யிட ஏற்­பாடு

தினமலர்  தினமலர்
தங்க சேமிப்பு பத்­திரம் அக்., 24ல் வெளி­யிட ஏற்­பாடு

புது­டில்லி;மத்­திய அரசு, தங்கம் இறக்­கு­ம­தியை கட்­டுப்­படுத்தும் நோக்கில், 2015 நவ., 5ல், முதன்முதலாக தங்க சேமிப்பு பத்­தி­ரத்தை அறி­மு­கப்­படுத்­தி­யது.
இது­வரை, ஐந்து முறை, தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. ஆறா­வது முறை­யாக, வரும், 24ம் தேதி, தங்க சேமிப்பு பத்­திரம் வெளியி­டப்­பட உள்­ளது. அவற்றில், நவ., 2 வரை, முத­லீட்­டா­ளர்கள் முத­லீடு செய்­யலாம். நவ., 17ல், தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள், முதலீட்டாளர்­களுக்கு வழங்­கப்­படும். வங்­கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்­ப­ரேஷன் நிறு­வனம், முக்­கிய நக­ரங்­களில் உள்ள அஞ்­ச­ல­கங்கள், பங்குச் சந்­தைகள் ஆகி­ய­வற்றின் மூலம், தங்க சேமிப்பு பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­யலாம்.
முத­லீட்டின் மீது, 2.5 சத­வீதம் ஆண்டு வட்டி, அரையாண்­டுக்கு ஒரு­முறை வழங்­கப்­படும்.தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள், வெளி­யீட்­டிற்கு பின், பங்குச் சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­படும். தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள், எட்டு ஆண்டுகள் முதிர்வு காலத்தை கொண்டவை.

மூலக்கதை