இந்தியா விளையாட மறுப்பு பாகிஸ்தானுக்கு ₹660 கோடி இழப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியா விளையாட மறுப்பு பாகிஸ்தானுக்கு ₹660 கோடி இழப்பு


இஸ்லாமாபாத்:  இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே முழுமையான இரு தரப்பு தொடர் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டில் நடந்தது. அதன்பின் 2015ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 6 தொடர்களில் விளையாட இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

ஆனால் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. இது தவிர கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை அனைத்து முன்னணி அணிகளும் தவிர்த்து வருகின்றன.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இது குறித்து பிசிபி நிர்வாகி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடரில் விளையாட இந்தியா மறுத்து வருவதால், 2007ம் ஆண்டில் இருந்து பிசிபிக்கு சுமார் ₹660 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தவிர கடந்த 6 ஆண்டுகளாக எந்த அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாததால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) இழப்பீடு கேட்கப்போவதில்லை என்றார்.



.

மூலக்கதை