வங்கதேச சுற்றுப்பயணம்; ஆண்டர்சன் அவுட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கதேச சுற்றுப்பயணம்; ஆண்டர்சன் அவுட்


லண்டன்:  இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, அக்டோபர் 7ம் தேதி டாக்காவில் நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 20ம் தேதி சிட்டகாங்கில் தொடங்குகிறது. ஆனால் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து, முன்னணி ேவகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார்.

முன்னதாக ஒரு நாள் தொடருக்கான அணியில் ஆண்டர்சன் பெயர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்து அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஆண்டர்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

எனினும் நவம்பர் 9ம் தேதி ெதாடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக, ஆண்டர்சன் உடல் நலம் தேறி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





.

மூலக்கதை