‘வேலை செய்வோருக்கே ஊதியம்’ பி.எஸ்.என்.எல்., முடிவு எடுக்குமா?

தினமலர்  தினமலர்
‘வேலை செய்வோருக்கே ஊதியம்’ பி.எஸ்.என்.எல்., முடிவு எடுக்குமா?

புது­டில்லி : டில்­லியில், மத்­திய தொலைத்­தொ­டர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தலை­மையில், பி.எஸ்.என்.எல்., உய­ர­தி­கா­ரிகள் கூட்டம் நடை­பெற்­றது.
அதில் அமைச்சர் பேசி­ய­தா­வது: அக்­க­றை­யுடன் பணி­யாற்றும் ஊழி­யர்­க­ளுக்கு உரிய சன்­மானம் அளிக்­கப்­பட வேண்டும். ஆனால், வேலை செய்­தாலும், செய்­யா­விட்­டாலும், மாதத்தின் முதல் நாள், கறா­ராக சம்­பளம் வாங்கி விடலாம் என்ற எண்ணம் பல­ருக்கு உள்­ளது. இந்த மனோ­பா­வத்தை ஊழி­யர்கள் கைவிட வேண்டும்.
பல நிறு­வ­னங்­களில், பணித்­திறன் அடிப்­ப­டையில் ஊதியம் வழங்­கப்­ப­டு­கி­றது. இதை, பி.எஸ்.என்.எல்., தன் ஊழி­யர்­க­ளி­டமும் நடை­மு­றைப்­ப­டுத்­தலாம். இது குறித்து, தொலைத்­தொ­டர்பு செய­ல­ரிடம் கூட நான் பேசி­யுள்ளேன். தொலைத்­தொ­டர்பு சேவையில், பி.எஸ்.என்.எல்., தற்­போ­தைய, 10.4 சத­வீத பங்­க­ளிப்பை, 15 சத­வீ­த­மாக உயர்த்த வேண்டும். தொலை­பேசி சேவையில், குறை­க­ளுக்கு தீர்வு காணாமல், இணைப்பு ரத்து செய்­யப்­ப­டு­வது குறித்து, விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது.இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை