மீண்டும் ரஜினியை இயக்குகிறார் ரஞ்சித்

தினமலர்  தினமலர்
மீண்டும் ரஜினியை இயக்குகிறார் ரஞ்சித்

ரஜினியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் மீண்டும் ரஜினியின் புதிய படத்தை இயக்குகிறார்.

ஷங்கர் இயக்கும் 2.0க்குப் பிறகு ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை கபாலியை இயக்கிய இயக்குனர் ரஞ்சித்தே மீண்டும் ரஜினியை இயக்கவிருக்கிறார். இதனை நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் இருவரும் தனது டுவிட்டர் பக்கங்களில் உறுதிபடுத்தியுள்ளனர். கபாலி படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறவைத்தது. இந்நிலையில் ரஜினியின் புதிய படத்தை மீண்டும் பா.ரஞ்சித்தே இயக்கவிருப்பதால் இப்படம் ‛கபாலி - 2' ஆக உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகிழ்ச்சி..

மூலக்கதை