வட மாகாணக் கல்வி அமைச்சிற்கு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஒதுக்கிய பணம் 4 ஆயிரம் மில்லியன் ரூபா மட்டுமே-குருகுலராஜா

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
வட மாகாணக் கல்வி அமைச்சிற்கு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஒதுக்கிய பணம் 4 ஆயிரம் மில்லியன் ரூபா மட்டுமேகுருகுலராஜா

வட மாகாணக் கல்வி அமைச்சிற்கு திட்டத்தின் கீழ் ஒதுக்கிய தொகையே 4 ஆயிரம் மில்லியன் மட்டுமே இதில் எவ்வாறு 6 ஆயிரம் மில்லியன் பணம் திரும்ப முடியும் என வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கேள்வி எழுப்புகின்றார்.

வட மாகாண கல்வி அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 6 ஆயிரம் மில்லியன் ரூபா திறைசேரிக்கு திரும்பவுள்ளதனால் அதனை கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு வழங்குமாறு வட மாகாண ஆளுநர் கோருவதாக கூறப்படுவது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வட மாகாணக் கல்வி அமைச்சிற்கு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஒதுக்கிய பணம்  4 ஆயிரம் மில்லியன் ரூபா மட்டுமே .இதில்  6 ஆயிரம் மில்லியன் பணம் திரும்பகின்றது என்ற செய்தி முழுத் தவறானது.

அதற்கு அப்பால் அதில் 600 மில்லியனை வார்த்தை தடுமாறி ஆளுநர் கூறியிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

அதற்கும் எந்த விதமான வாய்ப்புக்களும் கிடையாது . ஏனெனில் 4 ஆயிரம் மில்லியன் அனுமதிப்பதாக கூறப்பட்ட நிலையில் 4 ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கான திட்டங்களை தயார் செய்து ஆரம்பிக்கத் தயாரானோம் இருந்த போதிலும் இதில் 1450 மில்லியன் ரூபா பணத்தை மட்டுமே வழங்க முடியும். என திறைசேரி உறுதிபடத் தெரிவித்து விட்டது.

அவ்வாறு வாக்குறுதி அளிக்கப்பட்ட பணமும் முழுமையாக இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் வாக்குறுதியளிக்கப்பட்ட தொகை முழுவதிற்குமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

அதற்குரிய பணம் கையில் கிடைக்குமா என்ற ஏக்க நிலையுள்ளபோது 600 மில்லியன் ரூபா திரும்பவுள்ளதான தகவல் முழுத் தவறானது.

இவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்தை கோரி கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற திறைசேரிக் கலந்துரையாடலில் எடுத்துக் கூறியுள்ள நிலையில் அதற்கான நிதி இதுவரை கையில் கிட்டவில்லை என்பதே யதார்த்தம். என்றார்.

மூலக்கதை