உள்­கட்­ட­மைப்பு துறையில் ஜி.எஸ்.டி.,யின் தாக்கம்

தினமலர்  தினமலர்
உள்­கட்­ட­மைப்பு துறையில் ஜி.எஸ்.டி.,யின் தாக்கம்

ஜி.எஸ்.டி., என குறிப்­பி­டப்­படும் சரக்கு மற்றும் சேவை வரியால்,உள்­கட்­ட­மைப்புத் துறையில் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்கம் பற்றி ஒரு பார்வை:
மிகப்­பெ­ரிய வரி சீர்­தி­ருத்தம் என வர்ணிக்­கப்­படும் ஜி.எஸ்.டி., மசோதா பார்லி­மென்டில் நிறை­வே­றி­யதை அடுத்து, இதை அடுத்த ஆண்டு வாக்கில் அம­லுக்கு கொண்டு வரு­வ­தற்­கான சட்ட வழி­முறைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இத­னி­டையே பல்­வேறு துறை­களில் ஜி.எஸ்.டி., செலுத்­தக்­கூ­டிய தாக்கம் பற்றியும், அதனால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வுகள் பற்­றியும் விவா­திக்­கப்­பட்டு வருகின்­றன. இந்த பின்­ன­ணியில், நாட்டின் வளர்ச்­சிக்கு முக்­கி­ய­மாக அமையும் உள்­கட்­ட­மைப்புத் துறையில் ஜி.எஸ்.டி., தாக்கம் செலுத்­தக்­கூ­டிய அம்­சங்கள்:
மின்­சக்திஜி.எஸ்.டி., வரியில் இருந்து மின்சாரம் விலக்கி வைக்­கப்­பட முடிவு செய்­யப்­பட்­டி­ருப்­பதால், மின்­சார கட்­டணம் உய­ரலாம் என கரு­தப்­ப­டு­கி­றது. மின் உற்­பத்தி நிறு­வ­னங்கள், மூலப்­பொ­ருட்கள் மற்றும் இயந்­தி­ரங்­க­ளுக்கு ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும். ஆனால், அவற்றின் உற்­பத்­திக்கு விலக்கு இருப்­பதால், இப்படி செலுத்­தப்­படும் வரியை திரும்ப கோர முடி­யாது. இதனால் ஏற்­படும் கூடுதல் உற்­பத்தி செலவு, வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் இருந்து வசூ­லிக்­கப்­படும் என்­பதால்கட்­டணம் உயரும்.
சிமென்ட்கட்­டு­மானம் உள்­ளிட்ட உள்­கட்­ட­மைப்பில் சிமென்ட் முக்­கிய அம்­ச­மாக இருக்­கி­றது. ஜி.எஸ்.டி., இதன் மீது சாத­க­மான தாக்­கத்தை செலுத்தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தற்­போது சிமென்ட் மீதான ஒட்­டு­மொத்த மறை­முக வரி 25 சத­வீதம் வரை இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கிறது. ஜி.எஸ்.டி.,யில் இது குறையும் என்­ப­தோடு, சரக்கு போக்­கு­வ­ரத்­துக்­கான செலவு குறை­வ­தற்­கான வாய்ப்பு இருப்­பதும் சாத­க­மாக அமைந்து, விலை குறைய உதவும்.
சரக்கு போக்­கு­வ­ரத்துஇந்த துறையில் தான் ஜி.எஸ்.டி., கணி­ச­மான அளவு தாக்கம் செலுத்தும் என வல்­லு­னர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். இதற்கு அடிப்­ப­டை­யாக நான்கு முக்­கிய அம்­சங்­களை சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். முத­லா­வ­தாக இந்­தியா ஒரு பெரிய சந்­தை­யாக மாறும். எனவே, சரக்கு குடோன்கள் அளவில் பெரி­தாகி, அவற்றின் எண்­ணிக்கை குறையும். இரண்­டா­வ­தாக செயல்­பாட்டில் முக்­கிய மாற்றம் ஏற்­பட்டு பெரிய அள­வி­லான டிரக்­குகள் பயன்­பாட்­டிற்கு வரும்.இதன் கார­ண­மாக, சரக்கு போக்­கு­வரத்­திற்­கான செலவு குறைந்து, பல நிறுவ­னங்கள் இந்த பணியை வெளி நிறு­வ­னங்­க­ளிடம் ஒப்­ப­டைக்க முன்­வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மாநில எல்­லை­க­ளுக்கு இடையே உள்ள தடைகள் மற்றும் சோதனை சாவ­டி­களில் ஏற்­படும் காத்­தி­ருப்பு மற்றும் தாமதம் நீங்கி செயல்­திறன் மேம்­படும். இவற்றின் பல­னாக செல­வுகள் 20 முதல் 30 சத­வீதம் குறை­யலாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
பொறி­யியல் நிர்­வாகம்ஆலோ­சனை, பொறி­யியல் நிர்­வாகம் மற்றும் திட்ட மேலாண்மை சேவை­களில் எதிர்­ம­றை­யான தாக்கம் ஏற்­படும். இந்த சேவை­களை வழங்கி வரும் நிறுவனங்கள் தற்­போது செலுத்தி வரும் 15 சத­வீத வரியை விட கூடுதல் வரி செலுத்த நேரிடும்.தொழில் வளர்ச்­சியை ஊக்­கு­விப்­ப­தற்­காக மத்­திய மற்றும் மாநில அர­சு­களால் பல்­வேறு வரிச்­ச­லு­கைகள் அளிக்­கப்­படுகின்­றன. வரி விடு­முறை சலு­கை­களும் அமலில் உள்­ளன. ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்ட சலு­கைகள் அவற்றின் காலம் வரை தொடர அனு­ம­திக்­கப்­ப­டலாம் என்­றாலும், பின்னர் அவை நீக்­கப்­ப­டலாம் என்ற அச்சமும் நில­வு­கி­றது.
விமா­னச்­சேவைகச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரி­பொருள் உள்­ளிட்­ட­வற்றுக்கு விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது எதிர்­ம­றை­யான பலனை உண்­டாக்கும். விமான சேவை நிறு­வ­னங்கள் தற்­போது எரி­பொருள் வரி மீது சென்வாட் கிரெடிட் கோரி வரு­கின்­றன. ஆனால், இது மாறலாம். இதனால் விமான கட்­டணம் உய­ரலாம்.
பணி­க­ளுக்­கான ஒப்­பந்­தத்தில் ஜி.எஸ்.டி., மேலும் தெளிவை வழங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. பொறி­யியல், கட்­டு­மானம் மற்றும் கொள்­முதல் சார்ந்த பணிகள் சேவை­யாக கருதி வரி விதிக்­கப்­படும். பணி ஒப்­பந்­தங்­களில் தற்­போ­துள்ள பிரச்­னை­களை நீக்­கவும் இது வழி செய்யும். சாத­க­மான மற்றும் பாத­க­மான பலன்கள் கலந்து இருந்­தாலும், நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது சாத­க­மான பலன்­களே அதிகம் இருக்கும் என்ற கருத்தும் நில­வு­கி­றது. ஒட்­டு­மொத்­த­மாக பார்க்கும் போது, தற்­போ­துள்ள சிக்­க­லான வரி செயல்­முறை எளி­தாகி செயல்­தி­றனை அதி­க­ரிக்க உதவும் என்ற கருத்தும் உள்­ளது.

மூலக்கதை