தேசிய அரசாங்கத்திலிருந்து தம்மை ஓரங்கட்ட சூழ்ச்சி! ஜே.வி.பி குற்றச்சாட்டு

தமிழ்வின்  தமிழ்வின்
தேசிய அரசாங்கத்திலிருந்து தம்மை ஓரங்கட்ட சூழ்ச்சி! ஜே.வி.பி குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணியை தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கி விட மிகவும் கச்சிதமான திட்டம் ஒன்று தீட்டப்படுவதாக கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் கே.டி.லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

தேர்தல் சட்டத்தை திருத்துவதன் மூலம் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் சந்திப்பு ஒன்றை, மக்கள் விடுதலை முன்னணி நடத்தியுள்ளது.

இந்த சந்திப்பின்போது விவசாயிகளின் போராட்டத்தை எப்போது கொழும்பில் நடத்தப்போகிறீர்கள் என்று ஜனாதிபதி தம்மிடம் வினவியதாக லால் காந்த தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய லால் காந்த, நாடாளுமன்றம், பிரதேசபை ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் தமது உறுப்பினர்கள் முதலாளித்துவத்துக்கு பிரச்சினையாக உள்ளனர்.

இதன் காரணமாகவே எம்மை தேசிய அரசியலில் இருந்து ஒதுக்க திட்டமிடப்படுவதாக லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை