​அர்ஜெண்டினாவில் மிகப் பெரிய டைனோசர் வாழ்ந்ததற்காக அடையாளம் கண்டுபிடிப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​அர்ஜெண்டினாவில் மிகப் பெரிய டைனோசர் வாழ்ந்ததற்காக அடையாளம் கண்டுபிடிப்பு

அர்ஜெண்டினா நாட்டின் தொல்லுயிரியல் அறிஞர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களிலேயே மிகப்பெரிய டைனசர் வாழ்ந்ததற்கான அடையாளங்களைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த டைனோசரின் பெயர் Notocolossus gonzalezparejasi என தொல்லுயிர் ஆராய்ச்சியாளர்களின் தலைவர் டாக்டர் பெர்னார்டோ ரிகா தெரிவித்துள்ளார். 

இந்த டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறும் டாக்டர் பெர்னார்டோ ரிகா, இந்த டைனோசர் முதுகின் உயரம் மட்டும் 8 மீட்டர் வரை இருந்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.  

மேலும் இந்த டைனோசரின் எடை சுமார் 60 டன் வரை இருந்திருக்கக்கூடும் எனத் தெரிவித்த பெர்னார்டோ, இது தொடர்பான ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை