கருணாசை காணலியே? காரணம் என்ன?
Monday, 11 January 2016 08:16
இப்போதெல்லாம் நடிகர் சங்கம் தொடர்பான ஏரியாக்களில் கருணாசை காணோம்.
அதற்குள் கண் காது மூக்கு வைத்து மீடியாக்காரர்கள் மூச்சுவிட, சைலண்ட்டாக வேறொரு உண்மையை கசிய விட்டிருக்கிறது கருணாஸ் வட்டாரம். பதறும்படி ஒன்றுமில்லை. சொந்தப்படம் எடுத்து நிறைய சொத்துக்களை இழந்துவிட்டார் அவர். “இனிமேலாச்சும் நாலு படத்துல நடிச்சமா? விட்ட காசை புடிச்சமான்னு இருங்க. சங்கம் சங்கம்னு அலையறதை ஷுட்டிங் இல்லாதப்ப வச்சுக்கலாம்” என்று கூறிவிட்டாராம் வீட்டம்மா. மனைவி சொல்மிக்க மந்திரம் ஏது? ஷுட்டிங் இல்லாத நாட்களில் மட்டும் சங்கத்து பக்கம் எட்டிப்பார்கிறார் கருணாஸ்.