‘பசங்க 2’

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘பசங்க 2’

திரைச்செய்தி Thursday, December 24th, 2015

சூரியா

சூரியா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ‘பசங்க 2’ திரைப்படம் பெற்றோர், குழந்தைகளுக்குப் பாடமாக இருக்குமாம். இதை சூர்யாவே சொல்லி இருக்கிறார். ‘பசங்க 2’ வெளியீட்டையொட்டி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். “மழை வெள்ளம் சென்னையின் புதிய அடையாளமாக மாறி இருக்கிறது. நிறைய மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். அப்போது நாங்கள் இருக்கிறோம் என்று இளைஞர்கள் போர்க்குணத்தோடு வெளியே வந்தனர்.

“கழுத்தளவு தண்ணீரில் வீடு வீடாக சென்று பால் பாக்கெட்டுகள், தண்ணீர், உணவு போன்றவற்றை விநியோகித்தனர். முகம் தெரியாத பல பேர் உதவினார்கள். அத்தனை பேருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறேன். “எனது ‘அகரம் பவுண்டேஷன்’ மூலம் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. நான் தயாரித்துள்ள ‘பசங்க 2’ படம் பற்றி சில விஷயங்களைச் சொல்ல வேண்டும். “நல்ல கதை ஒன்றை படமாக தயாரிக்க முடிவு செய்து அந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன். அப்போது இயக்குநர் பாண்டிராஜ் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார். இருவரும் ஒருநாள் சந்தித்தோம். அப்போது இந்தப் படத்தின் கதையைச் சொன்னார். ரொம்பப் பிடித்துப் போனது.

“உடனே அந்தக் கதையை திரைப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தேன். என் குழந்தைப் பருவம் அப்பாவுடனும் அம்மாவுடனும் விளையாட்டிலும் மகிழ்ச்சியாக கழிந்தது. ஆனால் இப்போதோ குழந்தைகளை வீ ட் டு க் கு ள் ளே யே அடைத்து வைக்கிறோம். வெளியே விடுவதில்லை. இதனால் அவர்களுடைய மனநிலை மாறுகிறது.

மூலக்கதை