இனி ஹெச்டிஎப்சி வங்கி ஏடிஎம்-களில் பேப்பர் ஸ்லிப் வராது.. எஸ்எம்எஸ் மட்டுமே...

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி ஹெச்டிஎப்சி வங்கி ஏடிஎம்களில் பேப்பர் ஸ்லிப் வராது.. எஸ்எம்எஸ் மட்டுமே...

பைலட் முறை

இத்திட்டத்தை ஹெச்டிஎப்சி வங்கி சோதனை முறைகாக நாட்டில் சில பகுதிகளில் மட்டும் இத்தகைய முறையை பயனபடுத்த திட்டமிட்டுள்ளது.

இச்சோதனை முறை வெற்றிப்பெற்ற பின் இவ்வங்கியின் 11,700 ஏடிஎம்களிலும் இதனை செயல்படுத்த உள்ளது.

 

2 கோடி பரிமற்றங்கள்

இவ்வங்கியின் ஏடிஎம்களில் மாதத்திற்கு 2 கோடி வங்கி பரிமாற்றங்கள் நடைபெற உள்ளதாக ஹெச்டிஎப்சி தெரிவித்துள்ளது.

இப்புதிய திட்ட முறையின் மூலம் வங்கி வருடத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் சேமிக்க முடியும் ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

வாடிக்கையாளர் விருப்பம்

தற்போது உள்ள முறைப்படி வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பெயரில் பேப்பர் ஸ்லிப் பெறப்படுகிறது. இதில் 80 சதவீத வாடிக்கையாளர்கள் பேப்பர் ஸ்லிப்பை பார்த்தை உடனேயே அதை குப்பைத் தொட்டிகளில் போடப்படுவதாக ஆய்வின் முடிவுகள் கிடைத்துள்ளது.

கிரீன் பின்

மேலும் கடந்த வருடம் இந்நிறுவனம் நிறுவிய கிரீன் பின் திட்டத்தின் படி இனி டெபிட் மற்றும் கிரேட் கார்ட் பெறும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பின் எண் இனி மொபைலில் அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை