‛அஜித் 60' - தயாராகும் அஜித்

தினமலர்  தினமலர்
‛அஜித் 60  தயாராகும் அஜித்

மங்காத்தா படத்தில் இருந்தே சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து வரும் அஜித், நேர்கொண்ட பார்வை படத்தில் முந்தைய படங்களை விடவும் வயதானவரைப்போன்று நடித்தார். போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கிய அந்த படம் வெற்றிபெற்றதை அடுத்து மீண்டும் நேர்கொண்ட பார்வை டீமுடன் இணைகிறார்.

ரேஸ் தொடர்பான கதையில் உருவாவதாலும், அஜித் நிஜ பைக் ரேஸர் என்பதாலும், அவர் பல சாகசங்களை செய்யும் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெறப் போகிறது. ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர் இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

மேலும், இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைக்கிறார் அஜித். அதற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஜித், இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

மூலக்கதை