கீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் தொடங்கியது

தினமலர்  தினமலர்
கீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் தொடங்கியது

விளையாட்டை மையமாக வைத்து இப்போது ஏராளமான படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் அடுத்து பாலிவுட்டில் தயாராகும் படம் மைதான். 1952லிருந்து 1962 வரை இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தவர் சையத் அப்துல் ரஹிம். இந்திய கால்பந்தின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர். அவரது காலம் கால்பந்து விளையாட்டின் பொற்காலம் என்கிறார்கள்.

அப்படிப்பட்ட சையத் அப்துல் ரஹிம் பற்றிய கதைதான் மைதான். அவரது கதாபாத்திரத்தில் தான் அஜய் தேவ்கன் நடிக்கிறார். அவரது மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இது. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கியது.

பதாய் ஹோ படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் சர்மா இயக்குகிறார். போனி கபூர், ஆகாஷ் சாவ்ல்பா, அருணவா ஜாய் சென்குப்தா இணைந்து தயாரிக்கின்றனர். ஜகர்தா, ரோம், மெல்போர்ன் என சர்வதேச கால்பந்து போட்டிகள் நடந்த இடத்தில் படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. 2020-ல் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மூலக்கதை