96 ஜானு போன்று அனுபமா

தினமலர்  தினமலர்
96 ஜானு போன்று அனுபமா

விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்து வெளியான படம் 96. உருக்கமான காதல் கதையில் உருவான இந்தபடம் கடந்த சில ஆண்டுகளில் வெளியான காதல் கதைகளில் ஒரு சிறந்த படமாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் த்ரிஷா நடித்த ஜானு கதாபாத்திரம் பல நடிகைகளை கவர்ந்திருப்பதோடு அதுபோன்ற ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்றும் தங்களது ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது அதர்வா - அனுபமா பரமேஸ்வரனை வைத்து தான் இயக்கி வரும் படத்தில் அனுபவமாவின் கேரக்டர் 96 படத்தின் ஜானு கேரக்டர் போலவே அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் கண்ணன்.

மேலும், முழுமையாக ஜானு கேரக்டர் போல் இல்லையென்றாலும் ஒரு 50 சதவிகிதம் அந்த கேரக்டரின் பாதிப்பு இருக்கும் என்றும் கூறும் அவர், இதற்கு முன் அதர்வா நடித்த படங்களை விட இந்தப் படம் வித்தியாசமானது என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை