சினிமா வாய்ப்புக்காக எடையை குறைத்த நமீதா

தினமலர்  தினமலர்
சினிமா வாய்ப்புக்காக எடையை குறைத்த நமீதா

கடந்த 2002ல் முதல் முதலில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து, சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை நமீதா. அதன் பின், 2004ல், நடிகர் விஜய்காந்துடன் இணைந்து எங்கள் அண்ணா படத்தில் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரைப்பட உலகில் நுழைந்தார். மச்சான் நடிகை என, அவருக்கு செல்லப் பெயர் இட்டு ரசிகர்கள் நமீதாவை அழைக்கும் அளவுக்கு, தமிழ் ரசிகர்களிடம் நமீதா பிரபலம் ஆனார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தார். தமிழகத்தின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடிகை நமீதா நடித்தார். விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புக் குறைந்ததும், பிக்பாஸ் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு கலகலப்பூட்டினார்.

பின், தன் நீண்ட கால நண்பர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். தற்போதும் திருமண வாழ்க்கைக்குள் இருக்கும் நமீதாவுக்கு, சினிமா வாய்ப்பு மனசுக்குள் அரித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியாவது மீண்டும் சினிமாவுக்கு திரும்பி விட வேண்டும் என, சாமிகளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்.

கூடவே, தொடர்ந்து ஜிம்முக்கு செல்லும் நடிகை நமீதா, ஐந்தாறு மாதங்களில், பதினைந்து கிலோ வரை எடையை குறைத்து, அளவான உடல் அமைப்புடன் இருக்கிறார். அதை படமெடுத்து, சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் நமீதா. அவருக்கு இப்போதைக்கு வேண்டியது சினிமா வாய்ப்பு. அதை பெறுவதற்குத்தான், கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறாராம்.

மூலக்கதை