இந்தி தொடர்களையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

தினமலர்  தினமலர்
இந்தி தொடர்களையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவை இத்தனை காலமும் அச்சுறுத்தி வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், இப்போது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என கிளைபரப்பி, இந்திக்கும் சென்றிருக்கிறது. இதனால், தமிழ் ராக்கர்ஸ் பெயரை கேட்ட மாத்திரத்தில், இந்தி பட உலகினரும் அலறல் போடுகின்றனர்.

தமிழ் சினிமாவாக வெளியாகும் அன்றே, அனைத்து படங்களையும் தியேட்டர் பிரிண்டாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், ஒரே வாரத்தில் நல்ல பிரிண்ட்களையும் வெளியிட்டு வருகிறது. சமீப காலமாக, தமிழ் சினிமாப் படங்களைத் தாண்டி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, வெப் சீரிஸ்கள் என தன்னுடைய எல்லையை விரிவாக்கம் செய்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 15ல், நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியானது சேக்ரட் கேம்லின் இரண்டாவது சீசன். இதன் முதல் சீசன் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி, பலருடைய பாரட்டைப் பெற்றதோடு கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையில், இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்ய, அதை இரண்டே நாட்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மூலம் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியையும், இதே போலவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டது. இதனால், பலரும் அதிர்ந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட சேக்ரட் கேம்லின் தொடர் நிகழ்ச்சியை தமிழ் ராக்கர்ஸ் முன் கூட்டியே வெளியிட்டு விட்டதால், அதை பார்ப்போர் எண்ணிக்கை குறையும் என, தொலைக்காட்சி நிறுவனம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

மூலக்கதை