கீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் எப்போது?

தினமலர்  தினமலர்
கீர்த்தி சுரேஷின் ஹிந்தி படம் எப்போது?

மகாநடி படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தமிழில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இதேபோல் தெலுங்கிலும் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் அவர், ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக வெயிட் குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்திய கால்பந்தாட்ட வீரர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்த படத்தில் அஜய்தேவ்கனின் மனைவியாக நடிக்கிறார் கீர்த்திசுரேஷ். மேலும், இந்த படத்திற்காக கடந்த ஒரு மாதமாக கால்பந்தாட்ட பயிற்சி எடுத்து வருகிறார் அஜய்தேவ்கன். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு கடைசி வாரத்தில் தொடங்கப்பட இருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை