ராணுவ வீரராக நடிக்கும் ஜெயம் ரவி

தினமலர்  தினமலர்
ராணுவ வீரராக நடிக்கும் ஜெயம் ரவி

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும், நடிகர் ஐசரி கணேஷ் தயாரிப்பிலும், நடிகர் ஜெயம் ரவி நடிப்பிலும் உருவான படம் கோமாளி. இந்தப் படம், சர்ச்சைகளைக் கடந்து ரிலீசாகி வெற்றிகரமான ரிசல்ட்டைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், ஜெயம் ரவியின் 25வது படத்தை லட்சுமண் இயக்கும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். லட்சுமண், ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ரோமியா ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களை இயக்கியவர்.

இன்னும் தலைப்பிடப்படாத அந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க விவசாயத்தைப் போற்றும் வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்துக்கு அடுத்ததாக, ஒரு படத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது, ஜெயம் ரவி படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு ஜனகனமன என பெயர் சூட்டி உள்ளனர். இந்தப் படம் விவசாயத்தைப் போற்றும் வகையில் காட்சி அமைப்புகள் இருந்தாலும், உண்மையில், ராணுவ வீரராக இருக்கும் ஒருவர், விவசாயத்தை எப்படியெல்லாம் நேசிக்கிறார். அதனால், ஏற்படும் கஷ்ட-நஷ்டம்; சந்தோஷம் குறித்தெல்லாம் பேசுவதான் கதைக் களம். படம் குறித்த மற்ற விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டிருக்கிறது.

மூலக்கதை