புதிய 5ஜி போன்

தினமலர்  தினமலர்
புதிய 5ஜி போன்

ஒன்பிளஸ் நிறுவனம், புதிய, ‘5ஜி ஸ்மார்ட்போன்’ தயாரிப்பில் மும்முரமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.இந்நிறுவனம், அண்மையில், ‘ஒன்பிளஸ் 7புரோ’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த போனும், 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன் தான். இருப்பினும், புதிதாக ஒரு போன் தயாரிப்பில் இருக்கிறது, ஒன்பிளஸ்.இதற்கு காரணம், ‘ஒன்பிளஸ் 7புரோ’ எல்லா நாடுகளிலும் கிடைக்காது. எனவே, உலகளவில், அனைத்து நாடுகளிலும் கிடைக்கும் வகையில், புதிய, 5ஜி போனை, ஒன்பிளஸ் தயாரித்து வருகிறது.


இந்த புதிய, 5ஜி போன் பெயர் அனேகமாக, ‘ஒன்பிளஸ் 7 டி’ என்பதாக இருக்கலாம் என்கிறார்கள்.வரும், 2020ல், ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனை நீங்கள் வைத்திருக்க விரும்பினால், நிச்சயம் அதில், 5ஜி வசதி இருந்தாக வேண்டும். இதுதான் சந்தையின் தற்போதைய நிலவரம்.உங்கள் வசதி எப்படி?

மூலக்கதை