டி.ஜே.ஐ., மொபைல் 3 கிம்பல்

தினமலர்  தினமலர்
டி.ஜே.ஐ., மொபைல் 3 கிம்பல்

ஒருபக்கம், புதுப்புது போன்கள் வந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம், அவற்றை சிறப்பாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான சாதனங்களும், மென்பொருட்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.லேட்டஸ்ட்டாக, ‘டி.ஜே.ஐ., ஓஸ்மோ மொபைல் 3 ஹேண்டுஹெல்டு ஸ்மார்ட்போன் கேமரா ஸ்டெபிலைசர்’ அறிமுகம் ஆகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிம்பலில் போனை மாட்டிக்கொண்டால், புகைப்படம், வீடியோ ஆகியவற்றை எளிதாகவும், சிறப்பாகவும் எடுக்கலாம்.


டி.ஜே.ஐ., நிறுவனம், ட்ரோன்ஸ், மற்றும் கிம்பல்ஸ் தயாரிப்பில் உள்ள நிறுவனமாகும்.கிம்பல் என்பது, கேமரா ஸ்டாண்ட் போன்ற ஒன்று. கேமராவை அசைக்காமல், இதை அசைத்து, தேவையான கோணத்தில் படமெடுக்கலாம். மூன்று அச்சுகள் கொண்ட கிம்பல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது சிறிதுகூட அசைவு ஏற்படாமல் படமெடுக்கலாம் கைப்பிடியில் எல்லா பட்டன்களும் உள்ளன ஒரு பட்டனை அழுத்தினாலே, கேமராவை செங்குத்தாகவோ, கிடைமட்டமாகவோ மாற்றிக்கொள்ளலாம். போனை கழட்டி, மாட்ட வேண்டியதில்லை பலவித கோணங்களில், தானாகவே எடுக்கும் வகையில், புரோக்கிராம் செய்யப்பட்டுள்ளது


நபர்களின் தலை, தோள் ஆகியவற்றை அதுவே உணர்ந்து அட்ஜெஸ்ட் செய்யும் எளிதாக மடித்து வைத்துக் கொள்ளலாம் 405 கிராம் எடை 2,450 எம்.ஏ.எச்., பேட்டரி 5.0 புளூடூத் இணைப்பு வசதி விலை, இந்திய மதிப்பில், 8,500 ரூபாய்.

மூலக்கதை