ஹீரோக்கள் முக்கியமில்லை: ஷ்ரத்தா கபூர்

தினமலர்  தினமலர்
ஹீரோக்கள் முக்கியமில்லை: ஷ்ரத்தா கபூர்

பிரபல பாலிவுட் நடிகை ஷரத்தா கபூர். பாலிவுட்டின் ராஜா குடும்பமான கபூர் குடும்பத்தின் வாரிசு. கிளாமர், நடிப்பு இரண்டிலும் பாலிவுட்டில் கலக்கி வருகிறவர். முதன் முறையாக சாஹோ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் காதல் பதிக்கிறார். படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட ஷ்ரத்தா கபூர் கூறியதாவது:

சினிமாவுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது. எல்லா நடிகைகளுக்குமே தெலுங்கு, தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வம் இருக்கும். எனக்கும் அப்படி ஆர்வம் இருந்தது. நிறைய வாய்ப்புகளும் வந்தது. ஆனால் அவைகள் எனக்கு ஏற்ற மாதிரி இல்லை. ஹீரோக்களுடன் ஆடிப்பாடும் வகையில், அவர்களை நினைத்து உருகும் வகையில் இருந்தது. இதுபோன்ற உப்புசப்பில்லாத கேரக்டர்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நான் நடித்தால் எனது கேரக்கடருக்கு கதையில் உரிய முக்கியத்துவம் இருக்க வேண்டும், நடிக்க வாய்ப்பு இருக்க வேண்டும். அப்படியான ஸ்கிரிப்ட் அமையாததால் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கவில்லை

என்னை பொருத்தவரை ஹீரோ யார் என்பது பிரச்சினையே இல்லை. ஸ்கிரிப்ட்தான் ஹீரோ என்பதை உறுதியாக நம்புகிறவள். நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் புதுமுக நடிகருடன் கூட நடிப்பேன். சாஹோ பக்கா கமர்ஷியல் படம்தான். ஆனால் அதில் ஹீரோ பிரபாஸ் அளவிற்கு எனக்கு முக்கியத்தும் இருக்கிறது. நானும் அவரைப்போல ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோயின்கள் ஹீரோக்களுடன் டூயட் பாடுவதில்லை. அவர்களுக்கு நிகராக சாகசங்கள் செய்வார்கள் அப்படித்தான் சாஹோவில் நான் செய்திருக்கிறேன்.

இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். இந்த படத்துக்காக இயக்குனர் என்னை தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார் என்றும் இதுவொரு மும்மொழி திரைப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

இந்த படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் என்பதால் நிறைய ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் தான் நம்மால் கெட்டவர்களை அடிக்க முடியும். அதை நான் சிறப்பாக செய்துள்ளேன்.என்றார்.

மூலக்கதை