விமர்சனத்துக்கு பணிந்த பிருத்விராஜ்: பேன்சி நம்பர் பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்தார்

தினமலர்  தினமலர்
விமர்சனத்துக்கு பணிந்த பிருத்விராஜ்: பேன்சி நம்பர் பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்தார்

மலையாள நடிகர் பிருத்விராஜ் ஒரு கார் பிரியர். விலை உயர்ந்த கார்களை வாங்குவது அவரது ஹாபி. அதன்படி சமீபத்தில் 6 கோடியில் புதிய கார் ஒன்றை வாங்கினார். அந்த காருக்கு அவரது பேவரைட் நம்பரான 7 வரும்படி 7777 என்ற பேன்சி எண் கேட்டு விண்ணப்பித்தார். இந்த எண்ணின் விலை 6 லட்சம் ரூபாய். அதையும் கட்டிவிட்டார். இந்த எண்ணுக்கு மேலும் சிலர் போட்டியிடுவதால் எண் ஏலத்துக்கு வருகிறது. அப்படி வரும்போது அந்த எண்ணுக்காக 20 லட்சம் வரை செலவு செய்ய தயாராக இருந்தாராம்.

இந்த செய்தி வெளியில் கசிந்தது. கேரள மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி உயிருக்கும் உடைமைக்கும் போராடி வரும் நேரத்தில் ஒரு கார் எண்ணுக்காக இவ்வளவு பணம் செலவு செய்யலாமா, கொஞ்சமாவது பிருத்விராஜுக்கு பொறுப்பு இருக்கிறதா என்று நெட்டிசன் கடந்த சில நாட்களாகவே பிருத்விராஜை கிழித்து தொங்கவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் கார் எண் ஏலத்தில் இருந்து விலகி கொள்வதாக பிருத்விராஜ் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கடிதம் கொடுத்து விட்டார். அவர் கட்டிய 6 லட்சம் பணத்தை அப்படியே வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்து விட்டார். அதோடு 9 லட்சம் மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்துகளையும் வாங்கி கொடுத்து விட்டார். இப்போது நெட்டிசன்கள் பிருத்விராஜா பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மூலக்கதை