டிஎன்பிஎல் டி20 லீக் போட்டி: தூத்துக்குடியை வீழ்த்தியது திருச்சி.. இன்று திண்டுக்கல் - கோவை மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிஎன்பிஎல் டி20 லீக் போட்டி: தூத்துக்குடியை வீழ்த்தியது திருச்சி.. இன்று திண்டுக்கல்  கோவை மோதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் தூத்துக்குடி டுட்டி பேட்ரியட்ஸ் - திருச்சி ரூபி வாரியர்ஸ் அணிக்கு இடையிலான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டம் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர் முகுந்த் 6 ரன்களுடன் அவுட்டானார். அவருக்கு பின் வந்த ஆதித்ய பருவாவும் டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில், திருச்சி அணி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

தொடர்ந்து முரளிவிஜய் - ஆதித்ய கணேஷ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 4 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 57 பந்துகளில் 101 ரன்களை விளாசிய முரளி விஜய், அதிசயராஜ் டேவிட்சன் பந்தில் அவுட்டானார்.

அவருக்கு பின் ஆடிய ஆதித்ய கணேஷ் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 56 ரன்களை விளாசி அதிசயராஜ் டேவிட்ஸன் பந்தில் அவுட்டானார். மணிபாரதி 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்.



இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை திருச்சி அணி எடுத்தது. டுட்டி பேட்ரியட்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அதிசயராஜ்டேவிட்ஸன் 4-24 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய டுட்டி பேட்ரியடஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. அக்ஷய் சீனிவாசன் 63 மட்டுமே நிலைத்து ஆடி ரன்களை குவித்தார்.

திருச்சி தரப்பில் சந்திரசேகர் 2-34, பொய்யாமொழி 2-36 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முரளி விஜய் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று திருநெல்வேலி இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் இரவு 7. 15 மணிக்கு மோதுகின்றன.

.

மூலக்கதை