இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வேணாம்... பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வேணாம்... பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல்

மும்பை:  இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிகாலம், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வந்தது. ஆனால், பயிற்சியாளர்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.

மேற்கிந்திய தீவுகளுடனான தொடர் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இருந்தும் பேட்டிங், பவுலிங், பிஸியோ என அனைத்து விதமான பொறுப்புக்கும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.


தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிகாலத்தில், இந்திய கிரிக்கெட் அணி 70 சதவீதத்துக்கும் மேலாக வெற்றிகளை குவித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி, 2 ஆசிய கோப்பை, உலகக்கோப்பை அரையிறுதி போன்றவை குறிப்பிடத்தக்கது.

இதனால், வரும் ஆண்டுகளில் நடக்கக்கூடிய டி-20, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்றவற்றை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடர்வார் என தெரிகிறது.

இவருடன் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் ஒப்பந்தமும் நீடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


அதனால், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வெளிநாட்டை சேர்ந்த எவரும் தேர்வாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இதுகுறித்து, கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘கிரிக்கெட் ஆலோசனை குழுவில் 3 உறுப்பினர்கள் உள்ளனர்.

அதனால் தனிஒருவரின் கருத்துக்கு எவ்வித மதிப்பும் இருக்காது. ஆனால், பிசிசிஐ எப்போதும் எங்களின் முதல் தேர்வுக்கு மதிப்பளிக்கும்.

அதன் பிறகு தான் இரண்டாவது, மூன்றாவது தேர்வுக்கு செல்லும்.

இந்த தேர்வுக்கான முடிவு பெரும்பாலும் ஆகஸ்ட் மாதம் மத்தியில் இருக்கும்’ என்றார்.

.

மூலக்கதை