செப். 14ல் டேவிஸ் கோப்பை போட்டி: 55 ஆண்டுகள் கழித்து பாக். செல்லும் இந்திய அணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
செப். 14ல் டேவிஸ் கோப்பை போட்டி: 55 ஆண்டுகள் கழித்து பாக். செல்லும் இந்திய அணி

புதுடெல்லி: பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 14, 15ம் தேதிகளில் லாகூரில் இரு அணிகள் இடையே டேவிஸ் கோப்பை போட்டி புல்தரை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி 55 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் செல்கிறது. இதற்கான அணியை ஏஐடிஏ தேர்வுக் குழுத் தலைவர் ரோஹித் ராஜ்பால் அறிவித்தார்.

அதன்படி, ஒற்றையர் பிரிவில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் ராமநாதன்; இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா - துவிஜ் சரண் ஆகியோர் பங்கேற்பர்.

மற்றொரு வீரரான சுமித் நாகல், காயம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை.

சாகேத் மைனேனி ஒற்றையர், இரட்டையர் என 2 பிரிவிலும் பங்கேற்கிறார். இளம் வீரர் சசிகுமார் முகுந்த் மாற்று ஆட்டக்காரராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆசிய - ஓசேனியா குழு ஆட்டத்தில் வெல்லும் அணி 2020ம் ஆண்டில் நடக்கவுள்ள உலக குழு தகுதி ஆட்டங்களுக்கு முன்னேறும். இந்திய அணியில், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி, ரோஹன் போபண்ணா, து விஜ் சரண், கேப்டன் மகேஷ் பூபதி, பயிற்சியாளர் ஜீஷன் அலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


.

மூலக்கதை