டிஎன்பிஎல் டி20 லீக் தொடர்: காஞ்சியை வீழ்த்திய டிராகன்ஸ்....இன்று தூத்துக்குடி - திருச்சி அணிகள் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிஎன்பிஎல் டி20 லீக் தொடர்: காஞ்சியை வீழ்த்திய டிராகன்ஸ்....இன்று தூத்துக்குடி  திருச்சி அணிகள் மோதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில், டிஎன்பிஎல் டி20 லீக் தொடரில் காஞ்சி வீரன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான 23வது ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக விஷால் வைத்யா மற்றும் அருண் ஆகியோர் களமிறங்கினர். அருண் 12 ரன்களில் ஆட்டமிழக்க, பாபா அபராஜித் டக் அவுட்டானார்.

சஞ்சய் யாதவ் மற்றும் பிரான்சிஸ் ரோக்கின்ஸ் ஆகியோர் தலா 2 ரன்னில் வீழ்ந்தனர். 134 ரன்கள் இலக்கு சதீஷ் 10 ரன்னில் வெளியேறினர்.

மறுமுனையில் விஷால் வைத்யா 51 ரன்களில் கேட்ச் ஆனார்.

முடிவில் லோகேஷ்வர் 26 ரன்களும், சுதேஷ் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில், ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர்.

சிறப்பான துவக்கத்தை தந்த இந்த ஜோடியில் ஜெகதீசன் 21 ரன்களும், அடுத்து களமிறங்கிய சுமந்த் ஜெயின் 8 ரன்களும், கேப்டன் அஸ்வின் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதில், ஹரி நிஷாந்த் 38 பந்துகளில் அரை சதம் எட்டினார்.



முடிவாக, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18. 1 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. காஞ்சி வீரன்ஸ் சார்பில் அதிகபட்சமாக திவாகர் 2 விக்கெட்டுகளும், ஹரிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிபெற்றது.

இன்று, திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் தூத்துக்குடி அணியும், திருச்சி அணியும் மோதும் போட்டி, இரவு 7. 15 மணிக்கு தொடங்குகிறது.

.

மூலக்கதை