இந்திய அணியின் கேப்டனாக கோஹ்லியே இருக்கலாமே...: பாகிஸ்தான் மாஜி பாஸ்ட் பவுலர் கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய அணியின் கேப்டனாக கோஹ்லியே இருக்கலாமே...: பாகிஸ்தான் மாஜி பாஸ்ட் பவுலர் கருத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, சமூக வலைதளம் மூலம் அவ்வப்போது கிரிக்கெட் குறித்து பேசி வருகிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி தோல்விக்கு பின் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவியது. அதேநேரம் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கோஹ்லி கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று போட்டிகளிலும் கோஹ்லியே கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த அதிரடி மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாந்து போனதாக முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் உட்பட பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆனால், முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், ‘இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி தொடர்வதுதான் சரியானது’ என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்தர் கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டன் பொறுப்புக்கு விராட் கோஹ்லி சரிதான். ரோகித் சவாலான பொறுப்புக்களை சுமக்க சரியான ஆள்தான்.

உலகக் கோப்பை தொடரில் 5 சதம் அடித்து ரோகித் நிரூபித்தார்.

ஆனால் தற்போதைக்கு அந்த மாற்றத்துக்கு அவசியமில்லை’ என்றார்.

.

மூலக்கதை