இயக்குனர் சங்க தேர்தல் : ஆர்.கே.செல்வமணி வெற்றி

தினமலர்  தினமலர்
இயக்குனர் சங்க தேர்தல் : ஆர்.கே.செல்வமணி வெற்றி

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் இன்று (ஜூலை 21) நடந்தது. இதில் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வணி வெற்றி பெற்றுள்ளார்.

பாரதிராஜா, இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை வடபழநியில் இயக்குனர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், வித்யாசாகரும் போட்டியிட்டனர்.

இதில் இயக்குனர்கள் ஷங்கர், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், சீமான், விக்ரமன் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர். மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

மொத்தம் பதிவான 1503 ஓட்டுக்களில் 1366 ஓட்டுக்கள் பெற்று ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வித்தியாசாகர் 100 ஓட்டுக்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

மூலக்கதை