பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விபரம்

தினமலர்  தினமலர்
பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விபரம்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சேரனுக்கு ரூ. 50 லட்சம் வழங்கப் பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, டிஆர்பியில் கெத்து காட்டி வருகிறது பிக் பாஸ் சீசன் 3. ஏற்கனவே பாத்திமா பாபு மற்றும் வனிதா என இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்ட நிலையில், நாளை மூன்றாவதாக யார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார்கள் என்பது தெரிய வரும்.

இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பள விபரம் பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இயக்குநர் சேரனுக்கு ரூ 50 லட்சம் என மொத்தமாகவும், அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்ஷி ஆகியோருக்கு நாளொன்றுக்கு ரூ 25 ஆயிரமும், மோகன் வைத்யா, சாண்டி, கவின், சரவணன் ஆகியோருக்கு நாளொன்றுக்கு ரூ 35 ஆயிரமும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீரா மிதுன், ஷெரின் ஆகியோருக்கு நாளொன்றுக்கு ரூ 15 ஆயிரமும், முகன் ராவ், தர்ஷன் மற்றும் லாஸ்லியாவுக்கு தலா ரூ 5 லட்சமும் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

போட்டியாளர்களின் முக மதிப்பு, பிரபலத்தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விபரம் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

இதில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாத்திமா பாபு மற்றும் வனிதாவின் சம்பள விபரங்கள் இல்லை.

மூலக்கதை