ஆடை ஏற்றுமதி 7 சதவீதம் உயர்வு

தினமலர்  தினமலர்
ஆடை ஏற்றுமதி 7 சதவீதம் உயர்வு

திருப்பூர் : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த, 2017ல், ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததன் தொடர்ச்சியாக, ஏற்றுமதி சலுகைகள் குறைக்கப்பட்டன. இதனால், 2017 – 18 நிதியாண்டில், நாட்டின் ஆடை ஏற்றுமதி, சரிவை சந்தித்தது. இதன் பின், மத்திய அரசு, ‘டியூட்டி டிராபேக், ஸ்டேட் லெவிஸ்’ உள்ளிட்ட ஏற்றுமதி சலுகை விகிதங்களை உயர்த்தியது. இதனால், கடந்த நிதியாண்டு முதல், ஏற்றுமதி வர்த்தகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியது.

கடந்த நிதியாண்டின், முதல் காலாண்டில், ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 27,102.93 கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 29,008.41 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், ஆயத்த ஆடை ஏற்றுமதி, 7.03 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பின்னலாடை ஏற்றுமதியும் வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 12 ஆயிரத்து, 446 கோடி ரூபாயாக இருந்த, பின்னலாடை ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 13 ஆயிரத்து, 100 கோடி ரூபாயாக, 5.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

மூலக்கதை