பிக்பாஸில் தர்ஷன் வெல்வார் : ‛கேர்ள்பிரண்ட்' சனம் ஷெட்டி

தினமலர்  தினமலர்
பிக்பாஸில் தர்ஷன் வெல்வார் : ‛கேர்ள்பிரண்ட் சனம் ஷெட்டி

அம்புலி படத்தில் நடித்தவர் நடிகை சனம் ஷெட்டி. இவர், தற்போது பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்றுள்ள தர்ஷனின் கேர்ள் பிரண்ட் ஆவார். தர்ஷன் குறித்து அவர் அளித்த பேட்டி : தர்ஷனை மூன்று ஆண்டுகளாய் தெரியும். அவர் என், பாய் பிரண்ட். இருவரும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பது கனவு.

எங்களின் உறவு பற்றி எங்களது நெருக்கமான வாட்டாரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும். சில நாட்களுக்கு முன்னர் தான் தர்ஷனுடன் நெருக்கமாக உள்ள போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். அது தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இருவரும் நல்ல வாய்பிற்காக காத்திருக்கிறோம்.

பிக்பாஸ், தர்ஷனுக்கு நல்ல வாய்பாக, திறமைகளை வெளிப்படுத்த, அவரை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல உதவும். தர்ஷன் உடனான உறவுப்பற்றி நான் மட்டும் பேச விரும்பவில்லை.

பிக்பாஸ் இல்லத்தில் மீரா தான், தர்ஷனை தொல்லை பண்ணுகிறார். நானும், மீராவும் 2016ல் மிஸ் சவுத் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்றோம். என்னை அவருக்கு நன்றாக தெரியும். பல பிரச்னைகளை தாண்டி, அந்தப்பட்டம் தற்போது எனக்கு கிடைத்துள்ளது. நானும், தர்ஷனும் பழகுவது சினிமா துறைக்கே தெரியும். அப்படி இருக்கும்போது மீராவுக்கு மட்டும் தெரியாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. இதை வைத்தே சில நாட்களாக அவர் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

வனிதா தான் பிக்பாஸின் பொழுதுபோக்கே. கலகலப்பாக, ஒரு தாதா போன்று இருந்தார். அவர் வெளியேறியது வருத்தமே. அவரது இடத்திற்கு வேறு யாராவது வருவார். பிக்பாஸில் தர்ஷன் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார்.

மூலக்கதை