சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சோனியா, பிங்கி காலிறுதிக்கு முன்னேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சோனியா, பிங்கி காலிறுதிக்கு முன்னேற்றம்

புதுடெல்லி: சர்வதேச மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா சாஹல், பிங்கி ராணி, சிம்ரன்ஜித் கவுர் காலிறுதிக்கு முன்னேறினர்.  
சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்திய நட்சத்திர வீராங்கனை தலைமையில், 10 பேர் இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவா மோதினர்.

இருவரும் சிறப்பாக விளையாடியதால், போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இந்நிலையில், 3-2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெற்றிபெற்றார்.

இதன்மூலம் அவர் காலிறுதிக்கு முன்னேறினார். தோல்வியடைந்த ஸ்டானிமிரா, போட்டியின் நடுவர்கள் ஊழல் செய்து விட்டதாகவும், இது நடுநிலையான முடிவு கிடையாது என்றும் குற்றம்சாட்டினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

51 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், இங்கிலாந்து வீராங்கனை அலிசி எபோனியுடன் இந்திய வீராங்கனை பிங்கி ராணி பலப்பரிட்சை நடத்தினார்.

5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் பிங்கி ராணி நுழைந்தார். 64 கிலோ எடைப்பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர், ஸ்காட்லாந்தின் மெகன் ரிட்டை உடன் மோதினார்.

5-0 என்ற கணக்கில் அவரை வென்று காலிறுதிக்குள் முன்னேறினார்.   75 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீராங்கனை சவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை எல்சிபெடாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

.

மூலக்கதை