ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்தியாவுக்கு 2வது இடம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்தியாவுக்கு 2வது இடம்

புதுடெல்லி: ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 2வது இடம் பிடித்துள்ளது. விராட் கோஹ்லி, பும்ரா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.   சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், அணிகளுக்கான தரவரிசை பட்டியலில், 126 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 121 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், நியூசிலாந்து அணி 112 புள்ளிகள், தென் ஆப்பிரிக்கா 111 புள்ளிகள், பாகிஸ்தான் 102 புள்ளிகள் என அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

இதற்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

 871 புள்ளிகள் பெற்று துணை கேப்டன் ரோகித் சர்மா 2வது இடம் பிடித்துள்ளார்.

767 புள்ளிகளுடன் ஷிகர் தவான் 7வது இடத்தில் உள்ளார்.   பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 841 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 788 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், இந்திய வீரர் குல்தீப் 723 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் ரோகித் சர்மா, ஷிகர் தவான், குல்தீப், யஜுவேந்திர சாஹல் ஆகியோர் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் 10 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை