பங்கு வெளியீட்டுக்கு வரும் இரண்டு நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
பங்கு வெளியீட்டுக்கு வரும் இரண்டு நிறுவனங்கள்

புதுடில்லி, நவ. 13–புதிய பங்குகள் வெளியீட்டுக்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் இருந்து, மிசர்ஸ் பெக்டார்ஸ் புட் மற்றும் சன்சேரா என்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.மிசர்ஸ் பெக்டார்ஸ் புட் நிறுவனம், பிஸ்கட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் செபியிடம் விண்ணப்பித்து இருந்தது.பங்கு வெளியீட்டின் மூலம், 800 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.பிராண்டை பிரபலப்படுத்த, இந்த நிதியை பயன்படுத்த உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பனிகளை, ஐ.டி.எப்.சி.,பேங்க், எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மிசர்ஸ் பெக்டார்ஸ் புட் நிறுவனம், பிஸ்கெட் மட்டுமின்றி, பிரட், பன் போன்ற பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.பெங்களூரைச் சேர்ந்த இந்நிறுவனம், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.இந்நிறுவனம், அதன் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின், 1 கோடியே, 72 லட்சத்து, 44 ஆயிரத்து, 328 பங்குகளை விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.
பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, பிராண்டை பலப்படுத்துவது உள்ளிட்ட தேவைகளுக்காக பயன்படுத்த உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், கிரெடிட் சூசி செக்யூரிட்டிஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், நோமுரா பைனான்ஷியல் அட்வைஸரி அண்டு செக்யூரிட்டிஸ் மற்றும் பி.என்.பி., பரிபாஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

மூலக்கதை