ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.72.76

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பு சரிவு  ரூ.72.76

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக வர்த்தகமாகி வரும் நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ.72.76-ஆக வர்த்தகமானது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்திருப்பதன் எதிரொலியாகவும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.72.50-ஆக இருந்தது.

மூலக்கதை