ஸ்மார்ட் கண்ணாடி

தினமலர்  தினமலர்
ஸ்மார்ட் கண்ணாடி

சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான, டென்சென்ட், வீடியோ ரிக்கார்டு செய்யும் வசதி கொண்ட வீஸீ ஸ்மார்ட் கண்ணாடியை உருவாக்கி உள்ளது.இந்த கண்ணாடியின் முன்பக்க ஓரங்களில் இரு கேமிராக்கள் இருக்கும். அவை மூலம் பார்ப்பவற்றை வீடியோ பதிவு செய்துகொள்ளலாம். சிறு சிறு வீடியோக்கள் எடுத்து, உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வெளியிட விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில், இந்த ஸ்மார்ட் கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன் இது போல, ஸ்னாப்சாட் ஸ்பெக்டகிள்ஸ் எனும் ஸ்மார்ட் கண்ணாடி வந்தது. ஆனால் எடுபடாமல் போய் நஷ்டப்பட்டது தனிக்கதை.அனேகமாக, இன்று இந்த கண்ணாடி அறிமுகம் செய்யப்படலாம். சீன ஆன்லைன் வர்த்தக தளமான, அலிபாபா மூலம் வீஸி ஸ்மார்ட் கண்ணாடி விற்பனை செய்யப்பட உள்ளது.

மூலக்கதை