பணமதிப்பு நீக்கம் – ஜி.எஸ்.டி.,யால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: ரகுராம் ராஜன்

தினமலர்  தினமலர்
பணமதிப்பு நீக்கம் – ஜி.எஸ்.டி.,யால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: ரகுராம் ராஜன்

வாஷிங்டன்:‘‘பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமல் ஆகிய நடவடிக்கைகளால், 2017ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது,’’ என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.அவர், அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலையில் உரையாற்றியதாவது:


கடந்த, 2012 –- 16 வரை, இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி கண்டது. ஆனால், சர்வதேச பொருளாதாரம் வளர்ச்சி பெறும்போது, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., என்ற இரண்டு நடவடிக்கைகள், நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கற்களாக அமைந்து விட்டன.தற்போது, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி காணத் துவங்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அதை தடுக்கும் வகையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.


எனினும், தற்போதைய, 7 சதவீத பொருளாதார வளர்ச்சி குறையும்பட்சத்தில், ஏதோ தவறு நடக்கிறது எனலாம். ஆனால், இந்த வளர்ச்சி கூட போதாது.ஏனெனில், பெருகி வரும் தொழிலாளர்களை சமாளிக்க, மாதம்,10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க பட வேண்டும்.


வங்கிகளின் வாராக் கடனுக்கு, திவால் சட்டம் மட்டுமே தீர்வளிக்காது. வேறு சில வழி களையும் ஆராய வேண்டும்.இந்தியாவுக்கு, மூன்று முக்கிய பிரச்னைகள் உள்ளன. முதலாவ தாக, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். சீரற்ற மின்துறையை குறுகிய காலத்தில் சீர்படுத்தி, உற்பத்தியாகும் மின்சாரம், மக்களுக்கே கிடைக்குமாறு செய்ய வேண்டும்.


மூன்றாவதாக, வங்கித் துறையை சுத்தப்படுத்த வேண்டும்.இத்தகைய நடவடிக்கைகள், நாட்டின் வளர்ச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்ல உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை