அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பாவை பாதுகாக்க தனி இராணுவம்! - மக்ரோனின் கருத்தால் டொனால்ட் ட்ரம்ப் விசனம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பாவை பாதுகாக்க தனி இராணுவம்!  மக்ரோனின் கருத்தால் டொனால்ட் ட்ரம்ப் விசனம்!!

அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பாவை பாதுகாக்க தனி இராணுவம் அமைக்கவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
முதலாம் உலகப்போரின் நூற்றாண்டுகால நினைவு நாட்களை கொண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. இந்நிலையில் மக்ரோன், தெரிவித்த இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கும் போது, 'அமெரிக்கா, சீனா, இரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து ஐரோப்பாவை பாதுகாக்க தனி இராணுவப்படையை உருவாக்கவேண்டும் என மக்ரோன் தெரிவித்த கருத்து எம்மை அவமதிப்பதாகும்.' என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து தெரிவிக்கும் போது 'அவமானம்' என்ற வார்த்தையை பயன்படுத்தி கருத்து தெரிவித்திருந்தார். 
 
இது தொடர்பாக, எலிசே மாளிகை தரப்பில், 'இது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது!' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 'மக்ரோன் இராணுவத்தினரை உருவாக்குவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஐரோப்பாவை அமெரிக்கா, சீனா, இரஷ்யாவிடம் இருந்து பாதுகாக்கவேண்டும்!' என மட்டும் குறிப்பிட்டிருந்ததாக எலிசே தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை