பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்வு

தினமலர்  தினமலர்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்வு

புதுடில்லி : ‘மத்திய அரசின், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், உலகளவில் மின்னணு பணப் பரிவர்த்தனை, 1 சதவீதம் உயர்ந்துள்ளது’ என, கேப்ஜெமினி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:பிரதமர் மோடி, 2016, நவ., 8ல், உயர்மதிப்பு கரன்சிகள் செல்லாது என, அறிவித்தார். அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இந்நடவடிக்கை தோல்வி என, பெரும்பாலானோர் கூறுகின்றனர். இருந்த போதிலும், சர்வதேச மின்னணு பணப் பரிவர்த்தனை, எதிர்பார்த்ததை விட, 1 சதவீதம் அதிகரிக்க, மோடியின் நடவடிக்கை உதவியுள்ளது.கடந்த, 2016ல், சர்வதேச மின்னணு பணப் பரிவர்த்தனை, 9.1 சதவீதமாக வளர்ச்சி காணும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது, 10.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.ரொக்கம் சாரா பரிவர்த்தனை, 33 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், டெபிட் கார்டு மற்றும் மொபல் வாலெட் பிரிவுகளின் வளர்ச்சி, முறையே, 76 மற்றும் 76.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த, 2016ல், மின்னணு பணப் பரிவர்த்தனையில், இந்தியா, 36 சதவீத வளர்ச்சியுடன், ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தை பிடித்திருந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளை விஞ்சி, 9வது இடத்தை பிடிக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.உலக வங்கி அறிக்கைபணமதிப்பு நீக்க நடவடிக்கையில், பாதகத்தை விட, சாதகங்களே அதிகம். இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், சிறிதளவே குறைந்துள்ளது. முதல் அரையாண்டில், 7.3 சதவீத வளர்ச்சியில், 1 சதவீத அளவிற்கே, இரண்டாவது அரையாண்டில் குறைந்துள்ளது.அதேசமயம், அமைப்பு சார்ந்த துறையில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்பதை தெளிவாக கணக்கிட முடியவில்லை. எனினும், அமைப்பு சார்ந்த துறையில், குறிப்பிட்ட பிரிவுகள், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. நகர்ப்புற நடுத்தர மக்களுக்கு, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.வரி வசூல் அதிகரிப்புபணமதிப்பு நீக்க நடவடிக்கையால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை, 2016 -– 17ம் நிதியாண்டில், 25 சதவீதம் உயர்ந்து, 5.61 கோடியாக அதிகரித்துள்ளது. 2017 -– 18ம் நிதியாண்டில், சாதனை அளவாக, 6.92 கோடி பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனால், மத்திய அரசின் வரி வருவாய் உயர்ந்துள்ளது.

மூலக்கதை