டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்

புதுடெல்லி: டெஸ்ட் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது. பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, டெஸ்ட் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 116 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

106 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா 2வது இடத்திலும், இங்கிலாந்து அணி 105 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்தன.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி 935 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 910 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 847 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் வில்லியம்சன் 3வது இடத்திலும் உள்ளனர். 765 புள்ளிகளுடன் இந்தியாவின் புஜாரா 6வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில்,  இங்கிலாந்து அணி வீரர் ஆண்டர்சன் 899 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

தென் ஆப்ரிக்காவின் ரபாடா 882 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பாகிஸ்தான் அணியை சேர்ந்த அபாஸ் 829 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ஜடேஜா 6வது இடம் பிடித்தார்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில், வங்கதேச அணி வீரர் சாகிப் 420 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ஜடேஜா 400 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் 380 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர் 370 புளிகளுடன் 4வது இடத்திலும், இந்தியாவின் அஷ்வின் 341 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

.

மூலக்கதை