மைதானத்தில் பந்துவீச்சாளருக்கு சிரிப்பை ஏற்படுத்திய வீரர்...!

PARIS TAMIL  PARIS TAMIL
மைதானத்தில் பந்துவீச்சாளருக்கு சிரிப்பை ஏற்படுத்திய வீரர்...!

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஜார்ஜ் பெய்லி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வித்தியாசமான முறையில் துடுப்பாட்டம் செய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

 
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு அவுஸ்திரேலியா ப்ரைம் மினிஸ்டர் லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது.
 
அவுஸ்திரேலிய அணியின் ஜார்ஜ் பெய்லி, துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது பந்துவீச்சாளருக்கு முதுகை காட்டியபடி, ஸ்லிப் பீல்டர் இருக்கும் திசையைப் பார்த்து நின்று கொண்டிருந்தார். தனது தலையை மட்டும் பந்துவீச்சாளரைப் பார்த்தபடி திருப்பி நின்றுகொண்டிருந்தார்.
 
இவரது இந்த வித்தியாசமான பேட்டிங்கை ஸ்லிப்பில் நின்று பார்த்துக்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் பாப் டூபிளிசிஸ், பீல்டிங்கை மறந்து சிரிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து சிரித்துகொண்டே இருந்த டூபிளிசிஸை வர்ணனையாளர்களும், ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்த வேடிக்கையான வீடியோ காட்சியை, கிரிக்கெட் அவுஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அத்துடன் ஜார்ஜ் பெய்லி ஏன் இவ்வாறு பேட்டிங் செய்கிறார் என்பது குறித்த விளக்கமும் இடம்பெற்றுள்ளது.
 
ஏற்கனவே கடந்த 1924ஆம் ஆண்டிலேயே சில வீரர்கள் இந்த முறையை பின்பற்றி இருக்கிறார்கள் என, அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய பகுதியை ஒரு புத்தகத்தில் இருந்து படம் எடுத்து Hugh de Morville என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 
 

Faf having a cheeky giggle in the slips at Bailey's extraordinary stance 😂 pic.twitter.com/q30H7chZeP

— cricket.com.au (@cricketcomau) October 31, 2018

மூலக்கதை